பகீர்... போதையில் 400 அடி உயரத்திலிருந்து ஆற்றில் குதித்த வாலிபர் !

 
ஆறு

கேரள மாநிலத்தில் குடிபோதையில் இருந்த இலங்கை வாலிபர் ஒருவர், பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் குதித்து மூச்சுவிட முடியாமல் தத்தளித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான விபத்து நடைபெற்றுக் கொண்டிருந்த காட்சியை அவ்வழியாகச் சென்ற ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்து வெளியிட்டதுடன் அது வைரலாகியும் உள்ளது. அதிர்ஷ்டவசமாக  அவர் ஆற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி அனைவரையும் நிம்மதி அடையச் செய்துள்ளது. 

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள குழந்தைகள் விளையாடும் பூங்கா ஒன்றின் அருகே ஆற்றுப்பால நடைபாதை அமைந்துள்ளதுடன் அங்கு வந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த வாலிபர் கடுமையான மது போதையில் இருந்துள்ளார். திடீரென அவர் எங்கு இருக்கிறோம் என்பதை உணராமல் எதிர்பாராத விதமாகப் பாலத்தின் மீது இருந்து ஆற்றில் குதித்துள்ளதுடன் அங்கிருந்தவர்களைப் பதற்றமடையச் செய்துள்ளார். அந்த சமயம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வேகம் தாங்காமல் அந்த வாலிபர் தண்ணீருக்குள் மூழ்கி எழ ஆரம்பித்துள்ளார்.

ஆறு

சுமார் 100 மீட்டர் தூரம் வரை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட அவர், மூச்சு விட முடியாமல் தத்தளித்த நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியால் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மது போதையில் இது போன்ற விபரீதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாதுகாப்பற்ற முறையில் வாலிபர் ஒருவர் ஆற்றில் குதித்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.