பகீர்... வீடு புகுந்து கத்தி முனையில் தம்பதியரை மிரட்டி 50 சவரன் நகைகள், ரூ.7 லட்சம் கொள்ளை!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் தேவானூர் நாடு பரியூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கராசு. இவருக்கு பூங்காவனம், சரோஜா என இரு மனைவிகள் உள்ளனர். அவர்களது மகளுக்கு திருமணம் ஆகி வெளியூர் வசித்து வருகிறார். மகன் கொல்லிமலை செம்மேட்டில் அரசு பள்ளியில் படித்து வருகிறார்.

நேற்றிரவு வீட்டில் மனைவியுடன் இருந்த தங்கராசை அடையாளம் தெரியாத இருவர் கத்தியை காட்டி மிரட்டி இருவரையும் கட்டிப் போட்டு விட்டு, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகை ரூ.7 லட்சம், 3 செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக வாழவந்தி நாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
