தள்ளி விட்ட வாடிக்கையாளரைத் தாக்க முயன்ற ரோபோ... பகீர் வீடியோ!
ரஷ்யாவில் தன்னைத் தள்ளிவிட்ட நபரை ரோபோ ஒன்று தாக்க முயன்ற வீடியோ வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோபோ விற்பனை செய்யும் கடைக்கு வந்த அந்த நபர் முதலில் அங்குள்ள விற்பனையாளரிடம் கைகொடுத்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்த ரோபோவுக்கும் அவர் கைக்கொடுத்தபோது, அது கண்டுகொள்ளாததால் விரக்தியில் அதனைத் தள்ளிவிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ரோபோ, உடனடியாக அந்த நபரைத் தாக்க முயற்சித்துள்ளது. இதனால் கடைப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்த ஊழியர்கள் ரோபோவைச் சமாதானப்படுத்த முயன்ற போதிலும், அது கட்டுக்குள் வராததால் உடனடியாக அதனை ஆஃப் செய்து ஊழியர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்களின் இந்த அதிரடிச் செயல் இணையத்தில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இது போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் எதிர்பாராத செயல்பாடுகள் குறித்துப் பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகளைத் தவிர்க்கப் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
