குலசேகரப்பட்டினத்தில் இருந்து அடுத்த 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி!

 
இஸ்ரோ
 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் இருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் விண்ணுக்கு ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நாராயணன் நேற்று தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. சக இஸ்ரோ அதிகாரிகள், அலுவலர்களும் நாராயணனை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

இஸ்ரோ

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒரு இளைஞன் வெற்றியடைய வேண்டுமென்றால் படிப்பு மட்டும் முக்கியமல்ல. அனைத்து வகையிலும் மற்றவர்களுக்கு சேவை செய்யக்கூடிய நல்ல உள்ளத்தோடு வளர வேண்டும். கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை. உழைப்பும் வேண்டும்; நம் நாட்டு மக்களுக்கும், தேசத்திற்கும் என்ன செய்ய வேண்டும் என்ற பரந்த மனதோடு பணியாற்ற வேண்டும்.

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு" என்ற குறளுக்கு ஏற்ப உள்ளத்தை பொறுத்து நமது வளர்ச்சி அமையும் என்பதை வலிமையாக பதிவு செய்கிறேன். மாணவர்கள் குறிக்கோளுடன் படிக்க வேண்டும். அனைத்து விதத்திலும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சொந்த நாடு, சொந்த ஊர் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மனப்பான்மையோடு படித்து வேலைக்கு செல்ல வேண்டும்.

1947ல் சுதந்திரம் அடைந்த பிறகு சாதாரண ஒரு நாடாக இருந்த இந்தியா தற்போது பெரிய அளவில் முன்னேறி உள்ளது. நம் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எனவே, நம் தேசம் வளர்ச்சியடைந்த நாடாக மாற மாணவர்கள் சேவை செய்ய வேண்டும்.

இஸ்ரோ

இஸ்ரோவில் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும் என்பது இல்லை. இஸ்ரோ சார்ந்த பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் இருக்கிறது. செயற்கைக்கோள் இஞ்சின் போன்றவற்றை பல்வேறு தனியார் நிறுவனங்கள் தயாரித்து தருகின்றன. இதுபோன்ற வேலைவாய்ப்புகளையும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இஸ்ரோவில் நேரடியாக சேர்ந்தால் வரவேற்கத்தக்கது. இல்லாவிட்டாலும் வெளி நிறுவனங்களில் பணியில் சேரலாம்.

இஸ்ரோவின் தலைவர் பதவியை சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, கேரளா என்று பிரித்து பார்க்க வேண்டாம். இது இந்திய விண்வெளி திட்டம். பிரதமர் மோடியின் கீழ் உள்ள பெரிய திட்டம். எங்கள் அலுவலகத்தில் திறமைக்கு தான் மதிப்பு. எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. நான் ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து படித்து வந்தவன். என்னை இஸ்ரோவின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்துள்ளார்கள் என்றால் அது என் திறமைக்கான அங்கீகாரம் மட்டுமே.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் மையத்தை அமைக்கும் பணிகள் அனைத்து நடைபெர்று வருகின்றன. இன்னும் 2 ஆண்டில் அங்கிருந்து ராக்கெட்டுகள் விண்ணில் பாயும்” என்றார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web