மேட்டுப்பாளையம்–உதகை மலை ரயில் பாதையில் பாறைகள் வெடிவைத்து அகற்றம் !

 
உதகை

வடகிழக்கு பருவமழையால் நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டுப்பாளையம்–உதகை மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அடர்லி மற்றும் ஹில்குரோவ் நிலையங்களுக்கு இடையே பாறைகள் உருண்டு விழுந்ததால், மலை ரயில் சேவை கடந்த 19ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

உதகை

இதனால் மலை ரயில் சேவை இன்று வரை நான்காவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதையில் விழுந்துள்ள பெரும் பாறைகளை அகற்ற ரயில்வே துறை வெடிவைத்து தகர்க்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்தப் பணி முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.

பாதை சீரமைப்பு மற்றும் பாறைகள் அகற்றும் பணிகள் முழுமையாக முடிந்த பின்பே மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என சேலம் கோட்டம் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.