தமிழகத்தில் திடீரென வெடித்து சிதறும் பாறைகள்... பொதுமக்கள் அச்சம்!

 
பத்துகாணி மலை

கன்னியாகுமரி மாவட்டம் பத்து காணி மலைப்பகுதியில் திடீரென வெடித்து சிதறிய பாறைகளால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயிருகின்றனர். பாறைகள் திடீரென வெடித்து சிதறுவதற்கு அதிகரிக்கும் வெப்பம் காரணமா? என்கிற பீதி உலவி வருகிறது. மீண்டும் இது போன்று பாறைகள் வெடித்தால் நிலச்சரிவு ஏற்பட்டு பழங்குடியினர் குடியிருப்புகள் மீது பாறைகள் விழும் அபாயம் எழுந்துள்ளது.

பத்துகாணி மலை

குமரி மாவட்டம் மலையோர பகுதியான பத்து காணி மலைப்பகுதியில் நேற்று காலை திடீரென பாறைகள் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனைக் கண்டு பயந்த அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சென்று பார்த்தபோது உயரமான மலைப்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டு கீழ் நோக்கி வந்துள்ளது

கன்னியாகுமரி

மேலும் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாகவும் இருந்துள்ளது குமரி மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாகத்தான் பாறைகள் வெடித்து சிதறி இருக்கலாம் என்றும் பருவ நிலை மாற்றத்தினால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது என்றும் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பாறைகள் உடைந்து குடியிருப்பு வீடுகளின் மேல் விழும் நிலை உள்ளது என்றும் இதனால் மலைவாழ் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web