ரோஜர் பெடரர் சாதனை தகர்ப்பு... டென்னிஸ் வரலாற்றில் புதிய வரலாறு படைத்த ஜோகோவிச்!
சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ATP) வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில், செர்பியாவின் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் உலக டென்னிஸ் ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது 4-வது இடத்தில் நீடிக்கும் ஜோகோவிச், சர்வதேச தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் அதிக வாரங்கள் இருந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன் மூலம் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் நீண்ட கால சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இதற்கு முன்பு ரோஜர் பெடரர் முதல் 5 இடங்களுக்குள் 859 வாரங்கள் இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது ஜோகோவிச் தனது 860-வது வாரத்தை டாப்-5 இடத்திற்குள் தொடங்கி, பெடரரை விஞ்சி முதலிடம் பிடித்துள்ளார். ஜோகோவிச்சின் இந்த அசுரத்தனமான நிலைத்தன்மை, இளம் வீரர்களுக்கு ஈடுகொடுத்து அவர் இன்னும் களத்தில் சிங்கம் போல் வலம் வருவதை உறுதி செய்துள்ளது. ஜோகோவிச் இந்த 860 வாரங்களில் கிட்டத்தட்ட பாதியளவு வாரங்களை (428 வாரங்கள்) உலக தரவரிசையில் முதலிடத்திலேயே கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தரவரிசையின்படி, இத்தாலியின் ஜானிக் சினெர் முதலிடத்திலும், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 2-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 3-வது இடத்திலும், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் 5-வது இடத்திலும் உள்ளனர். டாப்-5 இடங்களில் மாற்றங்கள் ஏதும் நிகழாவிட்டாலும், ஜோகோவிச்சின் இந்த வரலாற்றுச் சாதனை டென்னிஸ் உலகைக் கொண்டாட வைத்துள்ளது. 38 வயதைக் கடந்தும் ஜோகோவிச் நிகழ்த்தி வரும் இத்தகைய சாதனைகள் அவர் ஏன் "ஆல் டைம்
