சதம் அடித்து தூள் கிளப்பிய ரோஹித்... ஒரு நாள் தொடரில் இந்தியா வெற்றி!

 
ரோஹித்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடத்தி முடிக்கப்பட்டுள்ள  நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

ரோகித் சர்மா கிரிக்கெட்

இந்நிலையில், இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு  வருகிறது. முதல் போட்டி  பிப்ரவரி 6ம் தேதி நாக்பூரில் நடைபெற்ற நிலையில், இதில்  இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கட்டாக் மைதானத்தில் நடத்தப்பட்டது.  

ரோஹித் சர்மா

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 304 ரன்கள் எடுத்தது . 305 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்று இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 32 வது சதத்தை அடித்து தூள் கிளப்பி  119 ரன்கள் குவித்தது வெற்றிக்கு வித்திட்டது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!