2027 உலகக்கோப்பையில் ரோகித் - கோலி ஜோடி? பிசிசிஐ உற்சாகமான தகவல்!

 
ரோஹித்

 

 

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக்கோப்பை தொடரின்போது ரோகித் சர்மாவுக்கு 40 வயதும், விராட் கோலிக்கு 38 வயதும் இருக்கும்.

Rohit Sharma, Virat Kohli's World Cup 2027 Absence Deemed To Be Far From Over | CREX

இந்நிலையில், அனுபவமிக்க இரு வீரர்களையும் 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் திட்டத்தில் இடம்பெறச் செய்ய பிசிசிஐ வட்டாரங்கள் விரும்புவதாகக் கூறப்படுகிறது. வீரர்களின் வயதைவிட உடற்தகுதி, தற்போதைய ஆட்டத்திறன் மற்றும் ஃபார்ம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BCCI Rohit Kohli 2027 ODI World Cup Plans | Devajit Saikia Statement

இதன்படி, ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராகவும், விராட் கோலி 3-வது வரிசை வீரராகவும் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் இருவருக்கும் உள்ள அனுபவம் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.இருப்பினும், 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருவரது இடமும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவின் இறுதி முடிவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.