"ரோகித் சர்மா ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவார்" - நவ்தீப் சைனி

 
ரோகித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி கேப்டனான ரோகித் சர்மா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடரில் நிச்சயம் பங்கேற்பார் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மாவின் ஓய்வு மற்றும் வருங்காலக் கிரிக்கெட் பயணம் குறித்துப் பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் நிச்சயம் விளையாடுவார் என்று நவ்தீப் சைனி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா கிரிக்கெட்

சமூக வலைதளங்களில் ரோகித் சர்மா தொடர்பாகப் பல்வேறு தகவல்கள் பரவி வருவதாகவும், அதை மட்டுமே வைத்து எந்தவொரு முடிவிற்கும் வரக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ரோகித் சர்மா ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்லாமல் அணியைத் திறம்பட வழிநடத்தும் மிகச் சிறந்த கேப்டன் என்றும் சைனி புகழாரம் சூட்டியுள்ளார். பல முக்கியமான போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்குத் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.