ரோஹித் பாய், விராட்டை கேட்டதா சொல்லுங்க... பெண் ரசிகையுடன் ஆட்டோகிராப் , போட்டோகிராப்... நெகிழ்ச்சி வீடியோ!
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிகள் நாளை அக்டோபர் 24ம் தேதி புனேவில் நடைபெற உள்ளது. இந்த போட்டி மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு பயிற்சி எடுப்பதற்காக ரோஹித் சர்மா உட்பட இந்திய வீரர்கள் மைதானத்திற்குச் சென்றார்கள். அப்போது ரோஹித் சர்மா செல்வதை அங்கிருந்த பெண் ரசிகை ஒருவர் பார்த்தார்.
Rohit Sharma's conversation with a fangirl today.😄💙#RohithSharma #ViratKohli #INDvNZ pic.twitter.com/afMBdrGZpV
— virat_kohli_18_club (@KohliSensation) October 22, 2024
அவரைப் பார்த்ததும் உற்சாகமாகி ரோஹித் பாய்…ரோஹித் பாய்… எனக்கு ஒரு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுங்கள் என கேட்கிறார். ரோஹித் சர்மாவுக்கு தான் சத்தம் போட்டது கேட்டிருக்காது. அவர் நமக்கு ஆட்டோகிராஃப் போட்டு கொடுக்கமாட்டார் என அந்த பெண் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ரோஹித் ஷர்மாவும் அவருடைய சத்தத்தை கேட்டு ஏற்று வேகமாக அவரிடம் இருந்த பேனாவையும், நோட்டையும் வாங்கி தன்னுடைய ஆட்டோகிராஃப்பை போட்டுக்கொடுத்தார்.
இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் ரசிகை ஆனந்தக் கண்ணீரில் நன்றி நன்றி ரோஹித் பாய் என கூறினார். அத்துடன் விராட் கோலியின் தீவிரமான ரசிகை நான். நான் அவரை கேட்டதாக சொல்லுங்க எனக் கூறுகிறார்.
அதற்கு ரோஹித் சர்மாவும் சிரித்துக்கொண்டு “கண்டிப்பாக விராட் கோலியிடம் சொல்கிறேன்” எனக் கூறுகிறார். நெகிழ்ச்சியடைந்த அந்த பெண் ரசிகை உற்சாகத்துடன் வீட்டிற்கும் செல்கிறா. இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
