ரயில் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து.. 3 பேர் படுகாயம்!

 
ரயில் நிலைய மேற்கூரை ரயில் நிலைய மேற்கூரை

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள சார்பக் ரயில் நிலையத்தில் திடீரென நடைமேடை மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ சார்பக் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று மதியம், ரயில் நிலையத்தின் 5-வது நடைமேடையில் தொழிலாளர்கள் மறுசீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள தற்காலிக அல்லது பழைய மேற்கூரையின்   ஒரு பகுதி எதிர்பாராத விதமாகப் பலத்த சத்தத்துடன் சரிந்து கீழே விழுந்தது.

தண்டவாளம் எழும்பூர் பராமரிப்பு

இந்தத் திடீர் விபத்தின் போது, அந்த நடைமேடையில் ரயிலுக்காகக் காத்திருந்த மற்றும் நடந்து சென்று கொண்டிருந்த பயணிகள் மீது இடிபாடுகள் விழுந்ததில், 3 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து நேரிட்ட உடனே ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

இடிபாடுகளில் சிக்கிப் படுகாயமடைந்த 3 பயணிகளும் உடனடியாக மீட்கப்பட்டு, அவசர ஊர்தி மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரயில் தண்டவாளம் பராமரிப்பு கட்டுமானம்

ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே இந்த விபத்திற்குக் காரணமா அல்லது கட்டுமானக் குறைபாடா என்பது குறித்து வட உத்திம ரயில்வே உயர் அதிகாரிகள் தற்பொழுது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விபத்து காரணமாக 5-ஆவது நடைமேடையில் தற்காலிகமாக ரயில்கள் வந்து செல்வது நிறுத்தப்பட்டு, மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.