இன்று முதல் ரோப்கார் சேவை நிறுத்தம்!! பக்தர்கள் கடும் அவதி!!

 
பழனி கோயிலில்  ரோப் கார் சேவைகள் ரத்து!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில் . மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள்  வருகை புரிந்து,  சாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. தரிசனத்திற்காக முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலை  கோயிலுக்கு செல்ல படிப்பாதை யானை பாதை முக்கிய   வழியாக  இருந்து வருகிறது.

பழனி கோயிலில்  ரோப் கார் சேவைகள் ரத்து!

அத்துடன் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது .  பழனி மலைக்கு ரோப் கார்  மற்றும் மின் இழுவை ரயிலில் செல்லலாம்.காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப் கார் தினமும் பிற்பகலில் ஒரு மணி நேரமும் மாதத்தில் ஒருநாளும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்படுகிறது .  ரோப்கார் சேவை ஒரு சில நிமிடங்களில் மலை  கோயிலின்  உச்சிக்கு சென்று விடும்  

 

 

ரோப்கார்
 இந்நிலையில் பழனி முருகன் கோயில் ரோப் கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்படும் என  கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை மற்றும் மின் இழுவை ரயில் இவைகளின் மூலம்   மலைக் கோவிலுக்கு சென்று வரலாம் என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web