இன்று பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்... பக்தர்களுக்கு அறிவிப்பு!

 
பழனி கோயிலில்  ரோப் கார் சேவைகள் ரத்து!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வீற்றிருக்கும் தண்டாயுதபாணி மலைக்கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி செல்லும் ரோப்கார் சேவை இன்று ஒரு நாள், பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கும் காரணங்களுக்காக நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பழனி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் வருகிறார்கள். மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை, ரயில் சேவை, ரோப்கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 5 நிமிடங்களில் மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப்கார் சேவை நாள்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும். மேலும் ரோப்கார் சேவை நாள்தோறும் பிற்பகலில் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக நிறுத்தப்படுகிறது.

பழனி கோயிலில்  ரோப் கார் சேவைகள் ரத்து!

தற்போது பங்குனி உத்திரத்தையடுத்து அதிகளவில் பக்தர்கள் வந்து சென்ற நிலையில், கோடை விடுமுறையிலும் பழனிக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப் காரின் சேவை நிறுத்தம் தொடர்பானஅறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இன்று மார்ச் 28-ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள், மாற்றுப்பாதைகளை பயன்படுத்தி பழனி மலைக்கோவிலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web