அந்தரங்க பிரச்சனைகள்... இத்தனை நோய்களையும், தீர்க்குது ரோஜா இதழ்கள்!

 
மூலநோய்

பூக்களின் அரசி ரோஜா . காதல் முதல் கல்யாணம் வரை ரோஜாவுக்கு சிறப்பான இடம் உண்டு. அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் ரோஜா இதழ்கள் அருமருந்து. பலவித மருத்துவ குணங்கள் கொண்ட  ரோஜாப் பூக்கள்   நோய்களை போக்கும் தன்மை பெற்றது.   மூலநோய்க்கு சிறப்பான மருந்தாக செயல்படுகிறது. பன்னீர் ரோஜாக்களை சாப்பிட்டு விடலாம்.  கடைகளில் வாங்கியதாக இருந்தால் சிறிது உப்பு தண்ணீரில் பத்து நிமிடம் வரை போட்டு வைத்து பின்பு நல்ல தண்ணீரில் அலசி எடுத்து  சாப்பிடலாம். காலையில் எழுந்ததும்  ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு  நன்கு சுத்தம் செய்த 15 - 20 ரோஜா இதழ்களை  நன்கு மென்று அதன சாறு முழுவதும் உள்ளே போகும்படி சுவைத்து முழுமையாக சாப்பிட்டு விட வேண்டும்.  சாப்பிட்டு அரை மணி நேரம் வரை வேறு எந்த உணவும் சாப்பிடாமல் இருந்தால் இதன் முழு பயனும் உங்களுக்கு கிடைக்கும். 

ரோஜா இதழ்கள்

மூல நோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு பலரும் பெரும் அவதியடைகிறார்கள். இந்த மூல நோய் உண்டாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. என்ன தான் மருந்து சாப்பிட்டாலும் ரத்த மூலம், உள்மூலம் ஆகியவற்றை சரிசெய்வது மிகக் கடினமான விஷயம். அறுவை சிகிச்சை தான் இறுதியில் தீர்வு என்று சொல்லப்படுகிற மூல நோயின் தாக்கத்தைக் கூட இந்த ரோஜா இதழ்களை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் குறைக்க முடியும்.

காலையில் சாப்பிடுவதை போல ஒரு டம்ளர் நீரில் ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களைச் சேர்த்து மாலை வேளையில் குடித்து வர மூல நோய் குணமாகத் தொடங்கும். உடல் சூடு அதிகமாக இருப்பவர்களுக்கு வாத, பித்த, கப தோஷங்கள் உடலில் சரியான நிலையில் இருக்காது.. அதுமட்டுமின்றி சருமப் பிரச்சினை, தலைமுடி திர்தல் தொடங்கி அசிடிட்டி  என  குடல் ஆரோக்கியத்தை பெரிதாக பாதிக்கும். 

ரோஜா

அதனால் எப்போதும் உடலின் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ரோஜா இதழ்கள் உதவி செய்யும். அதனால் உடல் சூட்டைத் தணிக்க நினைப்வர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் ரோஜா இதழ்களை மென்று சாப்பிடுங்கள். குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் என்ன சாப்பிட்டாலும் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும்.  வயிற்றுப்  பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறவர்கள் ரோஜா இதழ்களை வெந்நீரில். போட்டு கொதிக்க விட்டு அந்த நீரை டீ போல குடித்து வரலாம். ரோஜா இதழ்களை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் இளமையாக இருக்கும். வாய் சுத்தமாகும்.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web