பெரும் சோகம்.. அமெரிக்க முன்னாள் அதிபர் மனைவி காலமானார்.. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!

 
ரோஸ்லின் கார்ட்டர்

உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் மனைவி ரோஸ்லின் கார்ட்டர் காலமானார். அவருக்கு வயது 96.

1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ஜிம்மி கார்ட்டர். இவரது மனைவி ரோஸ்லின் கார்ட்டர் (96). இவர் வயோதிக பிரச்சினை காரணமாக ஜார்ஜியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஜிம்மி அதிபர் என்பதால் அந்த ஆட்சி விவகாரங்களில் ரோஸ்லின் தலையிடுவார் என யாரும் சந்தேகிக்கவில்லை. ஆனால் ஜிம்மி அதிபராக இருந்த போது அமைச்சரவையில் நடந்த மாற்றத்திற்கு ரோஸ்லின்தான் காரணம் என வெளிப்படையாக தெரியவந்தது.

Former U.S. first lady Rosalynn Carter dies at 96 - The Japan Times

அப்போது நான் அரசை நடத்தவில்லை என வெளிப்படையாக அறிவிக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். மேலும் ஜிம்மியை விட ரோஸ்லினுக்கு அரசியல் அனுபவம் அதிகம் என பலர் சொல்வதுண்டு. அதிபருடன் ஒரு திட்டம் குறித்து விவாதிப்பதற்கு முன்னர் அரசு அதிகாரிகள் ரோஸ்லினுடன்தான் முதலில் விவாதித்து அவருடைய ஆதரவை பெறுவார்களாம். ஜிம்மியும் ரோஸ்லினும் கடந்த 77 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். பத்திரிகையாளர்கள் ஆபாசமான செய்திகளையே எழுதுகிறார்கள் என ரோஸ்லின் விமர்சனத்தை முன் வைத்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிம்மியின் மூளையில் 4 சிறிய கட்டிகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

Notable quotes from former first lady Rosalynn Carter | WesternSlopeNow.com

அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அந்த கட்டிகள் கேன்சர் இல்லை என மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த நிலையில் ஜிம்மி கார்ட்டருக்கு 99 வயதுகள் ஆகும் நிலையில் அவர்தான் அதிக வயத வாழும் அதிபர் என்ற பெருமையை பெறுகிறார். அது போல் அதிக ஆண்டுகள் வாழ்ந்த அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை ரோஸ்லின் பெற்றுள்ளார். முதல் பெண்மணி 97 வயதில் இறந்த பெஸ் டிராமேன் ஆவார். ரோஸ்லின் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். 4 குழந்தைகளில் ரோஸ்லின்தான் மூத்தவர். அவர் சிறிய வயதாக இருந்த போதே அவருடைய தந்தை மறைந்ததால் தாய் வேலைக்கு போகும் நிலை ஏற்பட்டது. எனவே தாய் வீடு திரும்பும் வரை அவருடைய சகோதர சகோதரிகளை பொறுப்பாக பார்த்துக் கொண்டவர் ரோஸ்லின். இவர் சிறந்த மனிதாபமானியாவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web