பெங்களூரில் ரோட்டோரம் ட்ரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி ஒருவர் படுகாயம்... அதிர்ச்சி வீடியோ!

 
ட்ரான்ஸ்பார்மர் வெடித்து

பெங்களூருவில் நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றி திடீரென வெடித்துச் சிதறிய விபத்தில், அவ்வழியாக நடந்து சென்ற பாதசாரி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு பாகலூர் கிராஸ் அருகே உள்ள அமேசான் அலுவலக வளாகத்தின் நுழைவாயில் நடைபாதையில் இந்த மின்மாற்றி பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த முகமது அஃப்ரோஸ் என்ற பாதசாரி மீது திடீரென மின்மாற்றி பெட்டி வெடித்துச் சிதறியது. இதில் நிலைகுலைந்து போன அவர் சம்பவ இடத்திலேயே பலத்த காயங்களுடன் சுருண்டு விழுந்தார்.

ட்ரான்ஸ்பார்மர் அமேசான்

விபத்து குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த முகமது அஃப்ரோஸை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி தீவிர சிகிச்சை பெற்று வருவதாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.