ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி... கைதானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!
சிவகங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடி சுள்ளான் மதன் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 3 பேரை எஸ்பி தலைமையிலான காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதன்ப மூலம் இந்தச் சதித் திட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த ரவுடி சுள்ளான் மதன் (26) படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக மாவட்டக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கின் தொடர்ச்சியாக நேற்று அதிபதி ராஜா (26), மணிகண்டன் (25) மற்றும் விஜய் (19) ஆகிய 3 பேரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலையில் இவர்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, 3 பேரையும் காவல்துறையினர் முறைப்படி கைது செய்தனர்.
சுள்ளான் மதன் படுகொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைதாகியுள்ளதால், இவ்வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை மொத்தம் 14 ஆக உயர்ந்துள்ளது.

இக்கொலை சம்பவத்தில் மேலும் சில முக்கிய நபர்களுக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதால், தலைமறைவாக உள்ள அந்த நபர்களைப் பிடிப்பதற்காகச் சிவகங்கை மாவட்டக் காவல்துறையினர் சார்பில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர். முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் தொழில் போட்டியா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினரின் விசாரணை முடுக்கி விடப்ப
