சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை; போலீசார் தீவிர விசாரணை!
Aug 30, 2026, 11:35 IST
சென்னை கேளம்பாக்கம் சுடுகாட்டுப் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கேளம்பாக்கம் சுடுகாட்டுப் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சாகுல் ஹமீது (29) என்பவர் மர்ம கும்பலால் வழிமறிக்கப்பட்டு வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சுடுகாடு பகுதியில் உடல் கிடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலையாளிகளைத் தேடும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
