போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை.. அதிரடியாக சுட்டுப்பிடித்த காவல்துறை!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஆல்வின் (40). ரவுடி சத்தியபாண்டி கொலை வழக்கில் கோவை நீதிமன்றத்தில் அவர் ஆஜராகாத நிலையில், ஆல்வினுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று இரவு ஆல்வின் கோவை கொடிசியா மைதானம் அருகே இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது, தலைமைக் காவலர் ராஜ்குமாரை ஆல்வின் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆல்வினை துப்பாக்கியால் சுட்டார், காவலர் ராஜ்குமார் கையில் காயம் ஏற்பட்டது. ஆல்வினுக்கு இரண்டு முழங்கால்களிலும் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது. காயம் அடைந்த ஆல்வினுக்கு போலீசார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் ராஜ்குமாரை காவல் துணை ஆணையர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் நலமுடன் இருப்பதாக காவல்துறை துணை ஆணையர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!