தவெக அமைச்சர் நிர்மல்குமாருக்கு ஆர்.பி. உதயகுமார் கடும் எச்சரிக்கை!

 
ஸ்டாலினால் பொதுமக்களுக்கு பெருத்த ஏமாற்றம்! பொங்கியெழும் ஆர்.பி. உதயகுமார்..!

தவெக அரசு தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் திசைதிருப்புவதற்காக அதிமுக மீது தேவையின்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாகக் கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுக மீது எவ்வித ஆதாரமும் இன்றி அவதூறு மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் அமைச்சர் நிர்மல் குமார் சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும்.

தவெக நிர்மல்குமார்

"தவெக அரசைக் கவிழ்க்க திமுகவும் அதிமுகவும் கூட்டுச் சதி செய்கின்றன" மற்றும் "நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் எதிராக வாக்களிக்க ரூ.30 கோடி பேரம் பேசப்பட்டது" என அமைச்சர் நிர்மல் குமார் கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை.

மக்கள் ஆதரவுடன் ஜனநாயக முறையில் மட்டுமே அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றும், குறுக்கு வழியில் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

தவெக அரசு தனது சொந்தச் செயலின்மைகளையும் ஊழல்களையும் மறைக்கவே அதிமுகவின் பெயரைப் பயன்படுத்துகிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.