திருப்பதியில் இந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருக்குடைகள் சமர்ப்பிப்பு - ஆர்.ஆர்.கோபால்ஜி வழங்கினார்!

 
திருப்பதி பெருமாள் வெங்கடாஜலபதி துளசி

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ கருட சேவையையொட்டி, இந்து தர்மார்த்த சமிதி சார்பில் தமிழக பக்தர்கள் சார்பில் காணிக்கையாக வழங்கப்பட்ட வெண்பட்டுக் குடைகள் திருமலையில் அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டன.

திருமலை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவையின் போது, தமிழகத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மாலை மற்றும் சென்னையில் இருந்து அழகிய வெண்பட்டுக் குடைகள் ஆகிய இரண்டு மங்கலப் பொருட்கள் காணிக்கையாகச் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.

திருப்பதி திருமலை

இந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பில் கடந்த 21 ஆண்டுகளாகத் திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டுக்கான 22-வது ஆண்டு திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைக் கடந்து சென்ற இந்த ஊர்வலத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு திருக்குடைகளுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். 5 நாள் யாத்திரையாகச் சென்ற இந்த ஊர்வலத்தில் 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளைச் செலுத்தினர்.

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 2 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மற்ற 9 வெண்பட்டுக் குடைகளும் நேற்று காலை திருமலைக்குச் சென்று மாட வீதிகளில் வீதி உலா வந்தன. இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, ஒன்பது அழகிய வெண்பட்டுத் திருக்குடைகளையும், மலையப்ப சுவாமிக்கான பட்டு வஸ்திரங்களையும் தேவஸ்தான செயல் அதிகாரி முத்தடா ரவிச்சந்திரா மற்றும் கூடுதல் செயல் அதிகாரி சி.எச்.வெங்கையா சவுத்ரி ஆகியோரிடம் சமர்ப்பித்தார். இந்நிகழ்வில் தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உடனிருந்தனர்.