தூத்துக்குடியில் ₹1 கோடி நகை, பணம் மோசடி.. நிதி நிறுவனத்தை மூடிவிட்டுத் தம்பதி தலைமறைவு!

 
இன்று மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை! ஆர்வத்துடன் நகை வாங்கக் கிளம்பிய பெண்கள்!

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் இயங்கி வந்த தனியார் கோல்டு பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த கணவன், மனைவி இருவரும் 25-க்கும் மேற்பட்ட பெண்களிடம் சுமார் ₹1 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை மோசடி செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளனர்.

நகை பணம்

அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் மூதாட்டிகள் தங்களது தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்றும், சீட்டு முறையிலும் பணம் செலுத்தி வந்துள்ளனர். கடனுக்கான வட்டியை அவர்கள் முறையாகச் செலுத்தி வந்த நிலையிலும், இந்த மோசடி அரங்கேறியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தலைமறைவாகியுள்ள தம்பதியைத் தீவிரமாகத் தேடி வரும் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை பணம்

பண்டிகைக் காலம் நெருங்கும் வேளையில், நகைகளை மீட்கச் சென்ற பெண்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த ₹1 கோடி மோசடி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.