ரூ.10 கோடி மோசடி.. கொலை மிரட்டல்... பர்த்டே பார்ட்டியில் போதைப் பொருள்... கண்ணீருடன் பேட்டியளித்த பாடகி மங்லி!

 
பாடகி  மங்லி பாடகி  மங்லி

தனது தனித்துவமான குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த பிரபல பாடகி மங்லி, தன் மீது சுமத்தப்பட்டுள்ள நிதி மோசடி புகார்கள் குறித்து முதன்முறையாக ஊடகங்களிடம் கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்த அவர், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் அறிவித்துள்ளார்.

பாடகி  மங்லி
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மங்லி, "எனக்குத் தெரிந்ததெல்லாம் பாடல்கள் மட்டும்தான்; மோசடிகளைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. என் மீதான புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அதில் நான் ஏதேனும் தவறு செய்திருப்பது நிரூபணமானால், எந்தவொரு தண்டனையையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன். தயவுசெய்து ஆதாரமற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" எனக் கோரிக்கை விடுத்தார்.

பாடகி  மங்லி

மேலும், கடந்த ஒரு மாதமாகத் தனது இசை நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் ஒலிப்பதிவுகளை முழுமையாக நிறுத்தி வைத்துள்ளதாக அவர் கூறினார். மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் என்றும் துணையாக இருப்பேன் என்று உறுதியளித்த மங்லி, இந்த விவகாரத்தில் தன்னைச் சிக்க வைத்ததாகக் கூறி மது நாயக், ஹிமாகாந்த் ரெட்டி, ராமாவத் மது, சித்து மற்றும் சுப்பாராவ் ஆகியோருக்கு எதிராக மாநில டிஜிபியிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

திரைத்துறையில் வளர்ந்து வரும் ஒரு கலைஞர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதும், அதற்கு அவர் துணிச்சலாகப் புகார் அளித்துள்ளதும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உண்மைத்தன்மை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.