ரூ.10 லட்சம் மோசடி... கோவையில் ஏ.டி.எம். பணத்தை திருடிய தம்பதி கைது!
கோவை குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் தம்பதி, ரூ.10 லட்சம் பணத்தை மோசடி செய்த வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் பச்சைமுத்து (40) மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கதிர்வேல் பச்சைமுத்து கோவை குனியமுத்தூரில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் வைக்கும் தனியார் முகமை நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்காக நிறுவனத்தால் வழங்கப்பட்ட பணத்தில் இருந்து ரூ.10 லட்சத்தை கதிர்வேல் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் தங்களது சொந்தத் தேவைகளுக்காக எடுத்துப் பயன்படுத்தியுள்ளனர்.
ஏ.டி.எம். கணக்குகளை ஆய்வு செய்தபோது ரூ.10 லட்சம் குறைவது தெரியவந்ததை அடுத்து, நிறுவனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த குனியமுத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த தம்பதியை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
