ரூ.100 கோடி மோசடி வழக்கு - பி.டி. அரசகுமாருக்கு நீதிமன்றம் ஜாமீன்!
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமாருக்குச் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளிடம் பணமோசடி செய்த புகாரில் கைதான பி.டி. அரசகுமாருக்குச் சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலை 10 மணிக்குத் தவறாமல் ஆஜராக வேண்டும் என்றும், சாட்சிகளைக் கலைக்க முயற்சிக்கக் கூடாது மற்றும் தலைமறைவாகக் கூடாது என்றும் நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

முன்னதாக, பி.டி. அரசகுமார் மற்றும் முன்னாள் அமைச்சரின் உதவியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவுக் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, பல்வேறு கல்வி நிறுவனங்களிடம் பணம் பெற்றது தொடர்பான 44 ஆவணங்களும், ஒரு மடிக்கணினியும் (Laptop) கைப்பற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
