ரூ.100 கோடி மோசடி.. இந்தியர்களிடம் ஆட்டை போட்ட சீனாவை சேர்ந்தவர் கைது!
டெல்லியில் நடந்த சைபர் மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சுரேஷ் அச்சுதன், சைபர் கிரைம் போர்ட்டலில் ரூ.43.5 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அவர் அளித்த புகாரில், பங்குச் சந்தையில் பயிற்சி எடுப்பதாகக் கூறி என்னை வகுப்பில் கலந்து கொள்ள வைத்தனர். பின்னர் அதில் முதலீடு செய்வதாக உறுதியளித்து என்னை ஏமாற்றி பலமுறை ஆன்லைனில் பணம் பெற்றனர். நான் அனுப்பிய பணம் பலரது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது.
அந்த வங்கிக் கணக்குகள் அனைத்தும் குற்றவாளிகளுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பல வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கிக் கணக்கு ஒன்றை ஆய்வு செய்ததில், டெல்லி முண்ட்கா பகுதியில் வணிக வளாகம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கண்டுபிடித்து விசாரணையை முடுக்கிவிட்டு மோசடியில் ஈடுபட்ட சீன நாட்டை சேர்ந்த பாங் சென்ஜின் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் என்கிளேவில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. விசாரணையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களிடம் ரூ.100 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திரா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் அவர் மீது 17 வழக்குகள் உள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!