ரூ.100 கோடி மோசடி... திமுக நிர்வாகி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!

 
அரசகுமார் தனியார் பள்ளிகள் தலைவர்

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை முறைகேடாகப் பணம் வசூலித்த புகாரில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி. அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் தொடர் அங்கீகாரம், தர உயர்வு, சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி உள்ளிட்ட துறைகளின் அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாகப் பல்வேறு தனியார் பள்ளி நிர்வாகிகள் குற்றம்சாட்டிப் புகார் அளித்திருந்தனர்.

அட்

தனியார் பள்ளிகள் புதிய அங்கீகாரம் பெறுவதற்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலும் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பள்ளிகளுக்கான தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சட்டவிரோதமாகப் பணம் கைமாறியதாகப் புகார் எழுந்தது. தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், பி.டி. அரசகுமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

விசாரணையில், இவர் 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் முறைப்படி பதிவு செய்யப்படாத சங்கம் ஒன்றை நடத்தி வந்ததும், அதன் மூலமாக இந்த நிதி வசூலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக பி.டி. அரசகுமாரின் பெயரும், இரண்டாவது குற்றவாளியாக அந்தச் சங்கத்தின் பொருளாளர் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக நடைபெற்ற நிதிப் பரிவர்த்தனைகள், முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பல்வேறு பள்ளி நிர்வாகங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் தொகைகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கைது செய்யவும் போலீசார் வலைவீசியுள்ளனர். இந்த கைது நடவடிக்கை தமிழகக் கல்வித்துறையிலும், தனியார் பள்ளி வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.