ரூ. 4 கோடி பறிமுதல்.. பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் அதிரடி சோதனை!
நாடு முழுவதும் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 1 தொகுதிக்கும் வரும் 19-ம் தேதி ஒரே நேரத்தில் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நெருங்கி வருவதால், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், நகை, பரிசுப் பொருட்களை வழங்குவதை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து எழும்பூர் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வழக்கம் போல் எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டது. அந்த ரயிலில் அரசியல் கட்சியினர் சிலர் தேர்தல் செலவுக்கு பணம் கொண்டு செல்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், எழும்பூரில் இருந்து தாம்பரம் நோக்கி இரவு 8.35 மணிக்கு ரயில் வந்தபோது, அதில் ஏறி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, 3 பயணிகளிடமும் சூட்கேஸ்களில் பணம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர், உடனடியாக 3 பேரையும் பணத்துடன் தாம்பரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும், பணத்தை எண்ணி பார்த்தபோது அதில் 3 கோடியே 99 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பணத்துடன் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நாயனார் நாகேந்திரனின் நெருங்கிய உறவினர் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது.

நெல்லை எக்ஸ்பிரஸ் பணத்துடன் பிடிபட்டது புரசைவாக்கம் தனியார் விடுதி பா.ஜ.க.வை சேர்ந்த சதீஷ், அவரது மைத்துனர் நவீன் மற்றும் லாரி டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்தது. நெல்லை பாஜக வேட்பாளர் நாயனார் நாகேந்திரனிடம் பணம் கடத்த முயன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நெல்லையில் பணம் மாற்ற பணம் எடுத்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாஜக வேட்பாளர் நாயனார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பறக்கும் படையினர் சோதைனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
