10 நிமிஷத்தில ஆம்புலன்ஸ் வரலன்னா ரூ10000 அபராதம்... மத்திய அரசு அதிரடி உத்தரவு!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விபத்து நடந்த பத்து கி.மீ. சுற்றளவுக்குள் ஆம்புலன்ஸ் பத்து நிமிடங்களுக்குள் சென்றடைய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. விபத்து ஏற்பட்ட இடங்களில் விரைந்து செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையில் தாமதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ரூபாய் 10000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பலியான அல்லது பாதிக்கப்பட்ட நபரை ஒரு மணி நேரத்திற்குள் உரிய மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்கத் தவறினாலும் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கும் அவசர அழைப்புகளைப் புறக்கணிக்கும் பட்சத்திலும் அபராதம் விதிக்கப்படுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

நெஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளுக்கு உடனடி உதவி வழங்குவதற்காக ஒன்பது மூன்று மூன்று மூன்று என்ற உதவி மைய எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது. விபத்துகளில் சிக்குவோரின் உயிரைக் காக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய நடடிக்கைக்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. அவசர காலங்களில் இந்த உதவி எண்களைத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் உடனடியாகப் பயனடையலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
