விபத்தில் உதவினால் ரூ.10,000 வெகுமதி... அரசணை வெளியீடு!

 
ரூபாய் பணம்

யாருக்கோ.. எங்கேயோ நிகழ்கிறது என இனி சாலைகளில் கண்டும் காணாமலும் செல்லாதீர்கள். விபத்தில் உதவினால், ரூ.10,000 வெகுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

பொதுவாக சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் முன்பாக கூடியிருக்கும் கூட்டத்தினருக்கு பல கேள்விகள் எழக்கூடும். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்களை அனுமதிக்கப்படும் முன்பாக காவல் நிலையங்களில் தகவல் தருவது போன்று, ஓர் உயிரைக் காப்பாற்ற வேண்டிய அவசர காலத்தில் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள கூடாது என்று பொதுமக்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவே இத்தனை நாட்கள் இருந்து வந்தது. பலரும் விபத்து காலத்தில் இப்படி கடைசி நேரத்தில் யாரும் காப்பாற்ற முன்வராததால் இழந்திருக்கின்றன.

கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் மட்டுமே இப்படி சாலை விபத்துகளில் சிக்கி 1.32 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்துகளில் விபத்து நடந்த ஒரு மணி நேரத்துக்குள் இவர்களில் பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை. நமக்கெதற்கு பிரச்சனை என்கிற தயக்கம் பொதுமக்களிடையே இன்னும் இருந்து வருகிறது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது.

விபத்து

சாலை விபத்துகளில் சிக்கியவரை மீட்டு, மருத்துவமனைகளில் சேர்ப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதோடு, சிறந்த காப்பாளர் விருதும் வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் 10 சிறந்த காப்பாளர்களுக்கு, ஒன்றிய அரசின் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதே போல புதுச்சேரி அரசும் சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றி, உடனடியாக மருத்துவ வசதி கிடைக்க உதவுவோருக்கு, 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தது. தற்போது சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ.10,000 வெகுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வெகுமதி பெறுவதற்கு சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக (கோல்டன் ஹவர்) மருத்துவமனைக்கு ழைத்துச் சென்று, உயிரை காப்பாற்றியிருக்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள்ள் குறித்த விவரங்களை காவல் நிலையம் அல்லது மருத்துவமனையிடம் பெற்று மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் வெகுமதி பெற தகுதியானவர்கள்  குறித்த பரிந்துரையை மாதந்தோறும் போக்குவரத்து ஆணையரகத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைக்கப்படும். அதிலிருந்து,  தேர்வு செய்யப்படுவோரது வங்கிக் கணக்கில் ஆணையரகம் சார்பில் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்படும். உதவி செய்தவர்கள் தங்களது அடையாளத்தை வெளியே சொல்ல வேண்டும் என்று விரும்பாதவர்களுக்கு வெகுமதி வழங்கப்படாது எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்களை காப்பாற்றுவோருக்கு விபத்து எண்ணிக்கைக்கு ஏற்ப தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.  ஒரே விபத்தில் பல உயிர்களை ஒருவர் காப்பாற்றியிருந்தால் அவருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். ஒருவரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் ரூ.5 ஆயிரம் பகிர்ந்தளிக்கப்படும் என அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

TN-Govt

அதேபோல், ஒரே விபத்தில் பலரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவதோடு, ரொக்கப் பரிசுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் எனவும், இத்திட்டம் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே, சாலையில் விபத்துக்குள்ளானவர்களை மருத்துவமனையில் சேர்க்க, சில காரணகளுக்காகப் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்கி பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அரசு சார்பில் ரூ.5,000 அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, ஒன்றிய, மாநில அரசு சார்பில் மொத்தமாக ரூ.10,000 வழங்கப்படும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web