குடும்ப தலைவிகளுக்கு 10ஆயிரம் உதவித்தொகை.. வாக்குறுதி அளித்த காங்கிரஸ்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 10 ஆயிரம் வழங்கப்படும் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரசும், அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் மாநில தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் நேற்று காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். இந்த பிரச்சாரம் முதல்வர் அசோக் கெலாட் பங்கேற்று பேசுகையில், கிரகலட்சுமி உத்தரவாதம் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
இது பல தவணைகளாக வழங்கப்படும். 1.05 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சிலிண்டர் வழங்கப்படும். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.