ரூ.14,984 கோடி ஒதுக்கீடு... தமிழகத்தில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்!
2026-27ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் தனிச் சிறப்பு வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று (ஆகஸ்ட் 6, வியாழக்கிழமை) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
காலை 10 மணிக்குத் தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டைச் சமர்ப்பிக்கிறார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில் வேளாண் மற்றும் உழவர் நலத் துறைக்காக ரூ.14,984 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் நலனை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு புதிய தொழில்நுட்பத் திட்டங்கள், மானிய அறிவிப்புகள் மற்றும் பாசன நன்மைகளுக்கான அம்சங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை ஆகஸ்ட் 7ம் தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்களுக்குப் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் சட்டமன்றத்தில் நடைபெறவுள்ளன.
