பெண்களுக்கு மாதம் ரூ.1,500.. மெகா திட்டம் தொடக்கம்.. பயங்கர குஷியில் இல்லத்தரசிகள்!

 
லட்கி பகின்

மகாராஷ்டிராவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் சிவசேனா, பாஜக, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி கடும் பின்னடைவைச் சந்தித்தது. இந்நிலையில், 288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் ஆளும் கூட்டணி உள்ளது. துணை முதல்வர் அஜித் பவார் 2024-25ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்டை கடந்த மாதம் சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் `லட்கி பகின்’ (அன்பான சகோதரி) திட்டத்தை அறிவித்தார்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2/5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் வயது வரம்பு 21 முதல் 65 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் ரக்ஷா பந்தனை முன்னிட்டு நேற்று தொடங்கப்பட்டது. இந்நிலையில் தகுதியான பெண்களை தேர்வு செய்யும் பணி மிக குறுகிய காலத்தில் நடந்தது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் இணைந்து ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 2 மாதங்களில் பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததும்  பெண்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக திட்டத்தை துவக்கி வைத்த ஏக்நாத் ஷிண்டே, எங்கள் கூட்டணிக்கு மக்களாகிய நீங்கள் ஆதரவு அளித்தால், இந்த தொகை 2,000 அல்லது 3,000 ஆக உயர்த்தப்படும். இந்த திட்டத்தால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒட்டு வங்கிகளை குறிவைப்பதாக ஆளும் கூட்டணியின் அறிவிப்பை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா