ரூ.8,000 வரை வசூல்... சொகுசு ஹோட்டலில் விபச்சாரம்... வாட்ஸ்-அப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வலைவீசிய கும்பல்!

 
சினிமா ஆசைகாட்டி விபச்சாரம்! அதிர வைத்த பட தயாரிப்பாளர்! சுற்றி வளைத்த போலீசார்!

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ஆன்லைன் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பெண்களை வைத்து விபச்சாரத் தொழில் நடத்தப்பட்டு வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகக் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹரித்வாரில் உள்ள ஒரு ஹோட்டலில் சட்டவிரோதமாக விபச்சாரத் தொழில் நடைபெற்று வருவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இடைத்தரகர்கள் வாட்ஸ்அப் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் பெண்களின் புகைப்படங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வலைவீசியது தெரியவந்தது. ஒரு நபருக்கு ரூ. 1,500 முதல் ரூ.8,000 வரை கட்டணமாக வசூலித்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

அழகிகள் விபச்சாரம் உல்லாசம் மசாஜ் பாலியல்
இது குறித்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட அந்த ஹோட்டலுக்குச் சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். விபச்சாரத் தொழிலை முன்னின்று நடத்தியதாக ஒரு பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். சட்டவிரோதமாக இந்தத் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டிருந்த இரு இளம் பெண்களைக் காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டு, காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

விபச்சாரம்

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரொக்கப் பணம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சட்டவிரோத விபச்சாரத் தொழிலில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் நிர்வாகத்திற்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், இதன் பின்னணியில் சர்வதேச அல்லது மாநிலங்களுக்கு இடையேயான கடத்தல் கும்பல் செயல்படுகிறதா என்பது குறித்தும் ஹரித்வார் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.