ரூ.15.50 லட்சம் மோசடி... அரசு பள்ளி ஆசிரியை மீது புகார்!

மதுரை விளாங்குடியைச் சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியையான கவிதா. இவர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியை மீது புகாரளித்துள்ளார். அதில், “மதுரை அலங்காநல்லூர் அருகிலுள்ள தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணிபுகிறேன். அலங்காநல்லூர் சரந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகப் பணிபுரியும் ரேவதியை 2009 முதல் தெரியும். இவர் என்னிடம் பேசினார். அப்போது நானும், எனது கணவரும் ‘சிட் பண்ட்’ நடத்துகிறோம். இதில் சேமிப்பு சீட்டு திட்டத்தில் தவணை முறையில் பணம் செலுத்தினால் மொத்தமாக தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
அவரது வார்த்தைகளை நம்பி கடந்த 2017-ல் ரூ.1 லட்சம் சீட் இரண்டு, 2021-ம் ஆண்டு ரூ.5 லட்சம் சீட் இரண்டு, ரூ. 3.50 லட்சம் சீட் ஒன்று என, மொத்தம் ரூ.15.50 லட்சம் செலுத்தினேன். இத்தொகையை மாதந்தோறும் தவணை 2022-ம் ஆண்டில் முழுவதும் செலுத்தி முடித்துவிட்டேன். ஆனாலும், இதுவரை ரேவதி பணம் தராமல் அலைக்கழித்து வருகிறார். தொடர்ந்து அவரிடம் பணத்தை கேட்டபோது, தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டலும் விடுகிறார். என்னை போன்று பல ஆசிரியர்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்திருப்பதும் தெரிகிறது.
ரேவதி மற்றும் அவரது கணவர் சத்தியமூர்த்தி, அவர்களது மகள்கள் பிரிய நந்தினி, ப்ரீத்தி மற்றும் மருமகன்கள் மீது சட்டபட்டி நடவடிக்கை எடுக்கவேண்டும். எனது ரூ.15.50 லட்சத்தை மீட்டுத் தரவேண்டும் என்று”தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!