ரூ.180 லட்சம் கோடி இலக்கு... தமிழகத்தில் வாரந்தோறும் கூட்டுறவு சிறப்புக் கடன் முகாம்கள் அறிவிப்பு!

 
நகைக் கடன்

தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு எளிதில் கடன் உதவிகள் கிடைக்கும் வகையில் பிரத்யேக வாராந்திரச் சிறப்புக் கடன் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக மொத்தம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுச் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கூட்டுறவு வங்கி

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன் தொடர்பான முகாம்கள் நடைபெறும். இதர முன்னுரிமைக் கடன் தேவைகளுக்கான வெள்ளிக்கிழமைகளில் சிறப்புக் கடன் முகாம்கள் நடத்தப்படும்.

கடன் பெறத் தகுதியுள்ள பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள முகாம்களில் கலந்துகொண்டு விண்ணப்பித்துப் பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.