சென்னையில் 3 நாட்களில் ₹1.95 கோடி பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை அதிரடி!

 
பணம் ரொக்கம் சோதனை பறிமுதல் பணம் ரொக்கம் சோதனை பறிமுதல்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்கச் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சோதனை

சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் ₹1.95 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் மட்டும் சுமார் ₹34.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் விருகம்பாக்கத்தில் மட்டும் ₹33.50 லட்சம் சிக்கியுள்ளது. பணம் தவிர, தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் மற்றும் வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் பல இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சோதனை தேர்தல் நடத்தை விதிமுறைகள் விதிகள்

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 3 குழுக்கள் வீதம் மொத்தம் 48 பறக்கும் படைகள் மற்றும் 48 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (SST) 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளன. ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் இந்தத் தேடுதல் வேட்டை ஒருங்கிணைக்கப்படுகிறது.