வாரிசு சான்றிதழுக்கு ரூ.2,000 லஞ்சம்... பெண் வருவாய் ஆய்வாளர் கைது!

 
வருவாய் ஆய்வாளர் இலஞ்சம்

திருப்பூர் மாவட்டம் நல்லூரில் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.2,000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் முத்தனம்பாளையம் ரங்க கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் நிவாரண நிதி பெற வாரிசு சான்றிதழுக்காக  இவரது மகன் ஜீவா நல்லூர் வருவாய் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அப்போது இவரது விண்ணப்பத்தை அங்கீகரித்து வாரிசு சான்றிதழ் வழங்க வருவாய் ஆய்வாளர் மைதிலி ஜீவாவிடம் ரூ.7,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

திருப்பூர்

தன்னால் அவ்வளவு தொகை தர முடியாது என ஜீவா தெரிவித்ததை தொடர்ந்து ரூ.2,000 இருந்தால் தான் வாரிசு சான்றிதழ் தர முடியும் என்று மைதிலி கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத ஜீவா, இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கௌசல்யா தலைமையிலான போலீசார் ஜீவாவிடம் ரசாயனம் தடவப்பட்ட ரூ. 2,000  பணத்தை வழங்கியுள்ளனர்.

மகிழ்ச்சி! அரசு அலுவலகங்களில் லஞ்சம் தர தேவையில்லை!

நேற்று வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சென்ற ஜீவா, மைதிலியிடம் ரசாயனம் தடவப்பட்ட ரூ. 2,000 பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மைதிலியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!