எல்லை மீறிய இளைஞர்கள்... 17 வயது மாணவி செல்போனுக்கு ஆபாச வீடியோக்கள்!
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீபமாக அதிகரித்து வருகிறது. மீ டூ சர்ச்சைகள் வெளியான போது எழுந்த அதிர்ச்சி, தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சகஜமாகி விட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தந்தை, சகோதரன், மாமா, மச்சான், தாத்தா, பக்கத்து வீட்டு நண்பர், உறவினர், ஆசிரியர், பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுநர், வேன் டிரைவர், குடியிருப்பின் செக்யூரிட்டி என்று வீட்டிற்குள்ளேயே துவங்கி வீட்டிற்கு வெளியேயும் பெண்களுக்கு தொடர்ந்து ஆண்களால் அச்சுறுத்தலும், பாலியல் தொல்லைகளும் நடந்து வருகின்றன. மருத்துவமனையில் மருத்துவர்களுமே தங்களது வக்கிர புத்தியை பெண்களிடம் காட்டும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், 12ம் வகுப்பு படித்து வரும் 17 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு தொடர்ந்து ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் ரீதியில் தொல்லையும், மன உளைச்சலையும் தந்திருக்கிறார்கள் இளைஞர்கள். சென்னை கொத்தவால் சாவடி பகுயில் வசிக்கும் 12ம் வகுப்பு மாணவிக்கு, அவரது தந்தை ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்க வசதியாக புது செல்போன் வாங்கி தந்துள்ளார். கடந்த வாரம் அந்த செல்போன் எண்ணுக்கு தெரியாத எண்ணில் இருந்து ஆபாச வீடியோக்களும், அருவெறுக்க தக்க ஆபாச புகைப்படங்களும் வந்து குவிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஆபாசமான செய்திகளும் வர ஆரம்பித்துள்ளன.
இதனால் பயந்து போன மாணவி தனது தந்தையிடம் செல்போனை கொடுத்துள்ளார். அவர் செல்போனை சோதனை செய்த போது அதில் பல ஆபாச வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், தெரியாத எண்ணில் இருந்து தொடர்ந்து ஆபாசமான செய்திகள் மற்றும் வீடியோக்கள் வந்ததால், உடனடியாக மகளின் பாதுகாப்பு கருதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், ஆபாச வீடியோக்களை அனுப்பிய எண், ராஜஸ்தானில் இருந்து வந்து சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் தங்கி வேலை பார்க்கும் ரவி மற்றும் கிரண்சிங் செல்போன் எண்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், விசாரணையில் வடமாநில வாலிபர்கள் இருவர் சிறுமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த புகைப்படங்களை திருடி தவறான முறையில் வீடியோக்களை உருவாக்கி அனுப்பிய வைத்தது தெரியவந்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!