பெண்களுக்கான ரூ.2,500 திட்டத்தில் புதிய பயனாளர்களை சேர்க்க திட்டம்!

 
மகளிர் சுய உதவிக்குழு உதவித்தொகை தமிழக அரசு விஜய்

தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தலைவர் விஜய் அளித்த முதன்மை வாக்குறுதியான 'பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம்' (மதிப்புமிகு மகளிர் திட்டம்) அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விடுபட்ட தகுதியான புதிய பயனாளர்களை இணைப்பதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களைப் பெறும் நடவடிக்கைகளில் தமிழக அரசு  இறங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக மகளிர் தின விழாவில், பெண்களுக்கான சிறப்புத் தேர்தல் வாக்குறுதிகளைத் தலைவர் விஜய் வெளியிட்டிருந்தார். தற்போதைய அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை உயர்த்தி, மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களின் குடும்பங்களைத் தவிர்த்து, 60 வயது வரை உள்ள தகுதியான அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 தவெக ஆட்சியில் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

மகளிர் உரிமைத் தொகை

இத்துடன் 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்தத் திட்டத்தை முறைப்படி அமல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்கள் மற்றும் பட்ஜெட் வழிகாட்டுதல்கள் குறித்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் முன்னதாகச் செய்தியாளர்களிடம் விளக்கியிருந்தார். முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள சூழலில், இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தத் தவெக அரசு திட்டமிட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை பணம் ரொக்கம் ரூபாய்

முந்தைய கணக்கெடுப்பில் விடுபட்ட தகுதியுள்ள ஏழை, எளிய பெண்கள் மற்றும் புதிய குடும்ப அட்டை வைத்துள்ள தகுதியான இல்லத்தரசிகளிடம் இருந்து புதிய விண்ணப்பங்களைப் பெற்றுப் பயனாளர் பட்டியலை விரிவுபடுத்தத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கான விரிவான புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணை (G.O.) விரைவில் வெளியிடப்பட்டு, தகுதியான புதிய பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக மாதந்தோறும் ரூ.2,500 வரவு வைக்கப்படும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.