அம்...மாடியோவ்... புதிய மதுக்கடை விண்ணப்பங்களிலேயே ரூ2600 கோடி !!

 
சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

தமிழகத்தில்  மதுபானக்கடைகள் டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. தெலங்கானா மாநிலத்தில் மதுக்கடைகள் தொடங்க விண்ணப்பங்களை பெற்றதன் மூலமாக மட்டுமே ரூ.2600 கோடி வருமானம் கிடைத்துள்ளது. தெலங்கானா முழுவதும்   முழுவதும் மதுக் கடைகளை பெறுவதற்கான விண்ணப்பங்கள் குறித்து தெலங்கானா அரசு  4ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.   விண்ணப்ப கட்டணமாக திருப்பி செலுத்தப்படாத பணமாக ரூ.2 லட்சத்தை கட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

டாஸ்மாக்


மதுக்கடைகளை தொடங்க  மலை போல் விண்ணப்பங்கள் குவிந்தன. ஆகஸ்ட் 4 ம் தேதி  முதல் 19 ம் தேதி வரை  15 நாட்களில் சுமார் 1.32 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்திருந்தன. இதன் மூலம் ரூ2600 கோடி  வந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.தெலங்கானாவை தொடர்ந்து ஆந்திராவில்  இருந்தும் குறிப்பிட்ட   எண்ணிக்கையில்  விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரூர்நகர் பகுதியில் உள்ள ஒரே ஒரு கடைக்கு மட்டுமே அதிகபட்சமாக சுமார் 10,908 விண்ணப்பங்கள் வந்துள்ளன.   2021-23 ஏலத்தில்  விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் கிடைத்த தொகையுடன் ஒப்பீடு செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு அடுத்தடுத்து தேர்தல்கள் வரத் தொடங்கியுள்ளன.  இதனால்  பொருளாதார வளர்ச்சியுடன் வணிக நிகழ்ச்சிகள், விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றலா போன்ற இடங்களில் மதுபானங்களை பயன்படுத்துதல் அதிகமாகி வரும் சூழலில் மதுக்கடைகளுக்கும் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.இதனால், இந்த தொழில் வணிகத்தில் ஈடுபட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  தெலங்கானா  மட்டுமல்லாது, ஆந்திராவிலிருந்தும் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

From around the web