சென்னையில் ரூ.30 கோடி கிரிப்டோ மோசடி - 'டி.எப்.டி பிளாக்செயின்' நிறுவனம் மீது நடவடிக்கை!

 
கிரிப்டோ கரன்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!! கிரிப்டோ கரன்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த கிரிப்டோ கரன்சி நிறுவனம், அதிக லாபம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் சுமார் 30 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கையான முதலீடு என்று கூறி கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களை ஏமாற்றிய தனியார் நிறுவனம் மீது தற்போது சட்ட ரீதியான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

டி.எப்.டி பிளாக்செயின் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஆறு வகையான கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்தால், மாதந்தோறும் 15% முதல் 20% வரை நிலையான வட்டி மற்றும் லாபம் தருவதாக அந்நிறுவனம் ஆசை வார்த்தை கூறியுள்ளது. இந்த கவர்ச்சிகரமான திட்டத்தை நம்பி, சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 20 கோடி முதல் 30 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.

கிரிப்டோ கரன்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!

முதலீடு செய்தவர்களுக்குப் போதிய வட்டியோ அல்லது அசல் தொகையையோ தராமல் நிறுவனம் ஏமாற்றத் தொடங்கியுள்ளது. இது குறித்து கடந்த 2023-ம் ஆண்டே இந்திய ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் சென்றன. ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் அனைவரும் அலுவலகத்தைப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகினர்.

மத்திய நிறுவனங்கள் பதிவுத் துறை நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நிறுவனம் கம்பெனி சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளது. பொதுமக்களிடம் இருந்து வைப்புத் தொகையையோ அல்லது முதலீடுகளையோ திரட்டுவதற்கு முறையான எந்த ஒரு அனுமதியையும் அந்த நிறுவனம் பெறவில்லை. நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரிக்காமல் வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள நிறுவன இயக்குநர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.