எல் நினோ பாதிப்பு - பட்ஜெட்டில் ரூ.340 கோடி ஒதுக்கீடு!
Aug 6, 2026, 16:18 IST
நடப்பு ஆண்டில் எதிர்பார்க்கப்படும் 'சூப்பர் எல் நினோ' மற்றும் வறட்சிச் சூழலால் ஏற்படும் விவசாயப் பாதிப்புகளைக் கையாள தமிழக அரசு வேளாண் வரவு செலவுத் திட்டத்தில் ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சூப்பர் எல் நினோ நிகழ்வினால் நாடு முழுவதும் பெரும் தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குறிப்பாகத் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சிறப்புத் திட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளது.
பல்கலைக்கழகம் தயாரித்துள்ள இந்த 'மாவட்ட வேளாண்மை இடை ஏற்பாட்டு திட்டத்தை' தீவிரமாகச் செயல்படுத்த மாநில அரசு முழு வீச்சில் திட்டமிட்டுள்ளது.
