உஷார்... ரூ.2 கோடி கடன் தர 4 லட்சம் கமிஷன்.. போலி போலீசார் கைவரிசை!
கர்நாடக மாநிலம், சிக்பாலபுரம் மாவட்டம், சிந்தாமணி தாலுகா வெங்கடகிரி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி. இவரது மகன் சதீஷ் (வயது 37). இவர் 16 லாரிகள் வைத்து சிமென்ட் பாரம் ஏற்றும் தொழில் செய்து வருகிறார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய அவருக்கு பணம் தேவை. இதற்காக வீட்டை அடமானம் வைத்து கடன் பெற பல இடங்களில் பணம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் தனது லாரியை ஓட்டி வரும் நீலகண்டனிடம், கடன் கொடுப்பவரைத் தெரியுமா எனக் கேட்டுள்ளார்.
அதன் காரணமாக சென்னையைச் சேர்ந்த தேவராஜை நீலகண்டன் அறிமுகப்படுத்தினார். அப்போது தேவராஜிடம் கடன் குறித்து கேட்ட போது, ரூ. 4 லட்சம் கமிஷன் வீட்டு ஆவணங்களை கொண்டு வந்தால் ரூ.2 கோடி கடன் பெற்று தருவதாக கூறினார். சதீஷ் சம்மதித்து பணம் மற்றும் வீட்டு ஆவணங்களை எடுத்துக் கொண்டு நண்பர்கள் சிலருடன் கடந்த 19ம் தேதி காரில் சென்னை சென்றார். அதேபோல் தேவராஜ் சென்னையில் இருந்து வருவதால் பணம் கொண்டு வந்து நாட்டறம்பள்ளி, நெக்குந்தி சோதனைச்சாவடி அருகே வருமாறு கூறியுள்ளார்.
அங்கு சென்றபோது தேவராஜ் தான் கொண்டு வந்த காரின் டிக்கியில் இருந்த ரூ.2 கோடி போலி பணத்தை காட்டினார். அதன்பிறகு, சதீஷை தேவராஜ் காரில் ஏற்றிக்கொண்டு, இங்கு பணத்தை எண்ண வேண்டாம், ஏதாவது பிரச்னை வரும் என்று மறைவான இடத்தில் பணத்தை எண்ணலாம் என்று கூறிவிட்டு சென்றார். அங்கிருந்து நாட்டறம்பள்ளி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றார். ஒரு காரில் போலீஸ் சீருடையில் 2 பேரும், டிப் டாப் உடையில் 3 பேரும் நின்று கொண்டிருந்தனர். மேலும் தேவராஜ் பயணித்த காரை நிறுத்தி பணம் குறித்து விசாரணை நடத்துவது போல் செயல்பட்டுள்ளனர்.
அப்போது காரில் வந்த தேவராஜ், சதீஷ் உள்ளிட்ட அனைவரையும் பொருட்படுத்தாமல் காவல் நிலையத்திற்கு வாங்க, அங்க பேசலாம் என்று கூறி சதீஷ் கொண்டு வந்த 4 லட்சம் பணத்தை போலி போலீசார் எடுத்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ் பர்கூர் காவல் நிலையம் சென்று போலீஸ் சீருடையில் வந்த சிலர் பணத்துடன் சென்று விட்டது குறித்து கூறினார்.
அப்போது அங்கு வந்து தேடியும் அந்த போலீசார் இல்லை. அவர்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர், சம்பவம் நடந்த நாட்றம்பள்ளி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார். இதனையடுத்து இரு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வரும் நிலையில் நாட்றம்பள்ளி போலீசார் இன்று தேவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் ராஜேஷ்பாபு, கோபி ராஜா ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பணமோசடிக்கு பயன்படுத்திய கார் மற்றும் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், காவலர்களைப் போல் சீருடையில் வந்து மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!