₹42 கோடி நிதி ஒதுக்கீடு... பருவமழை முன்னெச்சரிக்கை - சென்னையில் மண்டல வாரியாக 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!
வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ளத் தமிழக அரசு ₹42 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 5 மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய 202 முக்கிய இடங்களில் தீவிர தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பருவமழை தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வீதம் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மண்டலம் 1 (திருவொற்றியூர்): பாலசுப்பிரமணியம், மண்டலம் 2 (மணலி): குமரவேல் பாண்டியன், மண்டலம் 3 (மாதாவரம்): அருண் ராஜ், மண்டலம் 4 (தண்டையார்பேட்டை): கண்ணன், மண்டலம் 5 (ராயபுரம்): ஆஷா அஜித்
மண்டலம் 6 (திரு.வி.க நகர்): கணேசன், மண்டலம் 7 (அம்பத்தூர்): விவேகானந்தன், மண்டலம் 8 (அண்ணா நகர்): காயத்ரி கிருஷ்ணன், மண்டலம் 9 (தேனாம்பேட்டை): கிறிஸ்துராஜ், மண்டலம் 10 (கோடம்பாக்கம்): கோபால சுந்தரராஜ்

மண்டலம் 11 (வளசரவாக்கம்): விஜய ராணி, மண்டலம் 12 (ஆலந்தூர்): வாகே சங்கேத் பல்வந்த், மண்டலம் 13 (அடையாறு): செந்தில் ராஜ், மண்டலம் 14 (பெருங்குடி): மகேஸ்வரி, மண்டலம் 15 (சோழிங்கநல்லூர்): பாஸ்கர பாண்டியன்
மழைநீர்க் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் நிவாரண மையங்களின் தயார்நிலையை இந்த அதிகாரிகள் நேரடியாக களத்தில் ஆய்வு செய்து மேற்பார்வையிடுவார்கள்.
