4 நாட்களில் ரூ.424 கோடி வசூல்.. 'ஜெயிலர் 2' பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை!

 
ஜெயிலர் மேக்னா ராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் திரையரங்குகளில் வசூலில் மாபெரும் சாதனைகளைப் படைத்து வருகிறது.

ஜெயிலர்

வெளியான முதல் நாளில் இருந்தே அரங்கு நிறைந்த காட்சிகளுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், தனது நான்காவது நாளில் மட்டும் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 55 கோடியே 85 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது. இதில் குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 39 கோடியே 95 லட்ச ரூபாயை வாரிக்குவித்துத் திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெயிலர் 2

இதன் மூலமாக, திரையரங்குகளில் வெளியான முதல் நான்கு நாட்கள் முடிவில் உலகளவில் ஒட்டுமொத்தமாக 424 கோடியே 25 லட்சம் ரூபாய் வசூலைக் கடந்து 'ஜெயிலர் 2' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய பிரம்மாண்ட மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.