நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து ரூ.480 வழிப்பறி.. 4 கொள்ளையர்களை அதிரடியாக மடக்கி பிடித்த போலீசார்!

 
கைது

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சேர்ந்த மணிபாரதி (வயது 26) தஞ்சாவூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, 4 மர்ம நபர்கள்மணிபாரதியை சுற்றி வளைத்தனர். அவரை அடித்து அவரிடம் இருந்த 480 ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.

இதையடுத்து, செல்போனை பறிக்க முயன்றபோது, ஓடி வந்து ரோந்து பணியில் இருந்த தென்பாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த போலீசார் கொள்ளையர்கள் 4 பேரையும் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில்,  கொள்ளையில் ஈடுபட்டது தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்த அப்துல்ரஹீம் (19), வண்டிக்கார தெருவை சேர்ந்த சதீஷ் (19), ஜெபமலைபுரத்தை சேர்ந்த முகமது ரோஷன் (20), ஒகநாடு பகுதியை சேர்ந்த வருண் (20) என்பது தெரியவந்தது.

அதன்பேரில், போலீஸார் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனம், பணம் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். கூட்டம் நிறைந்த பகுதியில் நிதி நிறுவன ஊழியரிடம் மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web