திருப்பதியில் ஒரே நாளில் ரூ.5.36 கோடி உண்டியல் காணிக்கை!
Aug 11, 2026, 20:30 IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.5.36 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகி சாதனை படைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் 81,064 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வருகை தந்த பக்தர்களில் 33,136 பக்தர்கள் தங்களது தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தினர்.

'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாத இலவச தரிசன வழியில் வந்த பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசிக்கச் சுமார் 18 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் நேற்று செலுத்திய உண்டியல் காணிக்கை மட்டும் ரூ.5 கோடியே 36 லட்சம் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 9 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன. மேலும், 2 லட்சத்து 82 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.
