ரூ.634 கோடி லஞ்சப் புகார்.. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!

 
அமைச்சர் கே.என்.நேரு அமைச்சர் கே.என்.நேரு

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மீது சுமார் ரூ.634 கோடி லஞ்சப் புகார் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைவழக்குப்பதிவு செய்துள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் இந்த முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் வரும் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருந்த சுமார் 2,538 பணியிடங்களை நிரப்புவதற்காகப் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது. இந்த 2,538 பணியிடங்களை நிரப்புவதற்காக மட்டும் தகுதியற்ற நபர்களிடம் இருந்து விதிகளை மீறிச் சுமார் ரூ.634 கோடி வரை லஞ்சம் கைமாறியதாகப் பரபரப்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கே.என்.நேரு

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த ஊழல் தொடர்பான வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. மத்தியப் புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறை சேகரித்துக் கொடுத்த மிக முக்கியமான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தான், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக இந்த ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நேரு

தமிழ்நாடு லஞ்ச மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் அவர்களின் நேரடி உத்தரவின் அடிப்படையில், கே.என்.நேரு மீது முறைப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அடுத்தகட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அடுத்தடுத்து அதிரடி சோதனைகள் நடத்தப்படலாம் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.